கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு, ஒரு புத்தகத்தை Scan செய்து, அதை எவ்வாறு DjVu மின்புத்தகமாக மாற்றுவது என்றுபார்ப்போம்.
DjVu - pdfக்கான Open Source மாற்று என்று கூறப்படுகிறது. http://djvu.org/
DjVu கோப்புகளை உருவாக்க நாம் பயன்படுத்தப்போகும் டூல்கள் (எல்லாமே Open Source/Free Software)-
- DjVu Libre - Command-line tools, (Windows/Linux)
- ImageMagick, தேவைப்பட்டால், tiff/png இதர கோப்புகளை DjVu Libre ஏற்றுக்கொள்ளும் வடிவத்திற்கு மாற்ற. (Windows/Linux)
- Scan Tailor, தேவைப்பட்டால், scan செய்த பக்கங்களை நறுக்கி, நிமிர்த்தி சுத்தம்செய்ய. (Windows/Linux)
- gscan2pdf - linuxல் மட்டும், DjVu Libre CLIக்கு பதில் GUI.
வழிமுறை 1: லினக்ஸில் gscan2pdfஐப்பயன்படுத்தி GUI மூலமாக
- (optional) Scan Tailorஐ வைத்து தேவையில்லாத கறுப்புப்பகுதிகளை நீக்கி, நேர் செய்து Tiff கோப்புகளை மேம்படுத்திவைத்துக் கொள்கிறோம்.
- gscan2pdfல் அந்த tiff படங்களைத் திறந்து File->Save as... DjVu :)
வழிமுறை 2: லினக்ஸ் அல்லது விண்டோஸில், DjVu Libre கட்டளைகள் மூலம்
- புத்தகத்தை ஸ்கேன் செய்து கொள்கிறோம். வழக்கம்போல Scan Tailorஐ வைத்து தேவையில்லாத கறுப்புப்பகுதிகளை நீக்கி, நேர் செய்து Tiff கோப்புகளை மேம்படுத்திவைத்துக் கொள்கிறோம்.
- கறுப்பு-வெள்ளை tiffகளை (Bi-Tonal Tiff) அப்படியே பயன்படுத்தலாம். வண்ணப் பக்கங்கள் இருந்தால் அவற்றை இமேஜ்-மேஜிக்-ஐக் கொண்டு NetPBM வடிவத்துக்கு மாற்றிக் கொள்கிறோம்(ppm - colour, pgm - grayscale)
- tiff/ppm/pgm -> தனித்தனி DjVu பக்கங்கள்.
- தனித்தனிப் பக்கங்களை இணைத்து ஒரே DjVu கோப்பு.
விரிவாகப்பார்ப்போம்.
வழிமுறை 1ல் பெரிதாக ஒன்றும் இல்லை. gscan2pdfல் (மட்டமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் நல்ல டூல்) பக்கங்களைத் திறந்து சேமிக்க வேண்டியது தான்.
இரு வழிமுறைகளிலும் பொதுவாக இருப்பது ஸ்கேன்-டெய்லர்.
இந்த ஸ்கேன்-டெய்லரை வைத்து, பக்கங்களை நேராக்கலாம், புத்தகத்தை விரித்து வைத்து இடது-வலது பக்கங்கள் ஒரே படத்தில் வரும்படி ஸ்கேன் செய்திருந்தால் அவற்றைத் தனித்தனியாகப் பிரிக்கலாம், முழுப் பக்கத்தில் எழுத்துக்கள் உள்ள பகுதியை மட்டும்வைத்துக்கொண்டு மற்றவற்றை நீக்கலாம். எல்லாவற்றையும் நாமாக manualஆகச் செய்யத்தேவையில்லை. Batch-modeல் அதே தானாக எல்லா பக்கங்களையும் திருத்தும், தேவைப்பட்டால் நாம் மேற்படி சரிசெய்யலாம்.
ஸ்கேன்-டெய்லர் விண்டோஸில் இருக்கு. உபுண்டு ரெப்பாஸிட்டரிகளில் இல்லை, நான் கம்பைல் செய்துகொண்டேன்.
வழிமுறை 2
படி1: ஸ்கேன்-டெய்லர்
மேலே குறிப்பிட்டது. பக்கங்களை சுத்தம் செய்து வைத்துக்கொள்வது.
படி 2: Tiffஐ NetPbmஆக மாற்றுதல்
முன்பே சொன்னதுபோல பக்கங்கள் bi-tonal tiffஆக இருந்தால் அப்படியே வைத்துக் கொள்ளலாம். வண்ணப்பக்கங்களை ppm ஆகா மாற்றிவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு புத்தகத்தை கருப்பு-வெள்ளையாக ஸ்கேன் செய்து வைத்திருக்கிறோம், அட்டைப்படம் மட்டும் கலரில் என்று வைத்துக் கொள்வோம். அட்டைப் படத்தை ppmஆக மாற்ற ImageMagickன் கட்டளைகளை -
$ convert page0001.tiff page0001.ppmஅவ்வளவுதான். (விண்டோஸிலும் இதேதான். கட்டளையை எங்கிருந்துகொடுக்கிறோம், tiff படம் எங்கே இருக்கிறது போன்றவற்றை, path விஷயங்கள், கவனித்துக் கொள்ள வேண்டும்)
மற்ற பக்கங்கள் tiffஆக இல்லாமல் pngஆகவோ, jpeg ஆகவோ இருந்தால் அவற்றையும் NetPbmஆக மாற்றிக் கொள்வது நல்லது.
$ convert page0002.png page0002.pbmகுறிப்பு: Netpbm formats: ppm - colour, pgm - grayscale, pbm - monochrome
படி 3: பக்கங்களை தனித்தனியாக DjVu கோப்பாக மாற்றிக்கொள்வது
இதற்கு DjVu Libreவில் உள்ள கட்டளைகளில் ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
f:\djvu\> c44 page0001.ppm page0001.djvu
(c44 - போட்டோக்கள், வண்ணப்பக்கங்கள் - முதல்பக்கம், இவற்றிற்கு)
f:\djvu\> cpaldjvu page0002.ppm page0002.djvu
(cpaldjvu - சில வண்ணங்கள் மட்டும் உள்ள பக்கங்களுக்கு - எ.கா. Screenshots)
f:\djvu\> cjb2 page0003.tiff page0003.djvu(cjb2 - கறுப்பு-வெள்ளைப் பக்கங்களுக்கு. Bitonal tiff / pbm files)
படி 4: அனைத்து DjVu கோப்புகளையும் இணைத்து மின்புத்தகமாக்குவது
இதற்கும் DjVu Libreவின் கட்டளை ஒன்றைப் பயன்படுத்துவோம்.
f:\djvu\> djvm -c myebook.djvu page0001.djvu page0002.djvu page003.djvuஇந்தக் கட்டளையைப் பிறப்பித்தவுடன் மேற்குறிப்பிட்ட மூன்று பக்கங்களும் இணைந்து myebook.djvu என்ற மின்புத்தகம் கிடைக்கும்.
இந்த மின்புத்தகத்தில் புதிதாக ஒருபக்கத்தை இணைக்க
f:\djvu\> djvm -i myebook.djvu page0004.djvu 4
கடைசியில் சொன்ன 4 - பக்கம் எண். கீழே உள்ள கட்டளை புத்தகத்திலிருந்து 2ஆவது பக்கத்தை நீக்கும்.
f:\djvu\> djvm -d myebook.djvu 2
~~~~~~
பி.கு.கள்
- நான்கைந்து பக்கங்களுக்கு மேல் இருந்தால் Script/batch file எதாவது எழுதி வைத்துக் கொள்வது உத்தமம். page0001.djvu page0002.djvu ...... என நூற்றுக்கணக்கான பக்கங்களை command-lineல் கொடுக்க சில சுருக்குவழிகள் இருக்கின்றன. தேடிப்பாருங்கள்.
- DjVuக்கு இலவசமாக நிறைய viewers, browser-plugins இருக்கின்றன. நல்ல editorகள் நான் தேடியவரை கிடைக்கவில்லை (gscan2pdf தவிற). உங்களுக்கு எதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.
- நாம் மேலே உருவாக்கியது bundled djvu கோப்பு. அதாவது அதன் பக்கங்கள் அனைத்தும் அதற்குள் அடக்கம். Indirect file என்று ஒருவகை உண்டு. அதாவது myebook.djvuக்குள் வெறும் லின்க்குகள் மட்டும் இருக்கும். பக்கங்கள் வெளியே தனித்தனியாக இருக்கும். djvmcvt ஐ வைத்து ஒரு bundled documentஐ, Indirect documentஆக மாற்றலாம். ஆனால் உருவாக்கும்போதே தனித்தனியான djvu பக்கங்களை வைத்து Indirect DjVu புத்தகமாக எப்படி உருவாக்குவது என்று தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
- via ananth
0 comments:
Post a Comment